ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் S9 சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச நுகர்வோர் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அனைவரும் எண்ணிய நிலையில், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S 9 மற்றும் S 9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் Super AMOLED Infinity Display முறையே 5.8 மற்றும் 6.2 இன்ச் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இவற்றின் Iris Scanner ஆப்பிள் ஃபேஸ்ஐ-டிக்கு போட்டியாக மேம்படுத்தப்படலாம் எனவும் தகவல் கிட்டியுள்ளது.
அமெரிக்காவில் Snapdragon 845 Processor மற்றும் சர்வதேச சந்தையில் Exynos 9810 Chipset-டை இரண்டு ஸ்மார்ட்போன்களும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், சாம்சங் நிறுவனம் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.