Honor நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
61Shares
61Shares
ibctamil.com

முதற்தர கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Honor ஆனது தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

Honor View 10 எனும் இக் கைப்பேசியானது 5.99 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Octa Core Kirin 970 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதில் 13 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 16 மெகாபிக்சல்களை உடைய கலர் கமெரா மற்றும் 20 மெகாபிக்சல்களை உடைய மொனோகுரோம் கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இந்தியா, மலேசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்