iPhone X கைப்பேசிக்கு வந்த மற்றுமொரு சோதனை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த iPhone X கைப்பேசியில் Face ID வசதியினை தந்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

இவ் வசதியினைப் பயன்படுத்தி உரிமையாளரின் முகத்தினைக் கொண்டு கைப்பேசியினை அன்லாக் செய்ய முடிவதுடன் Apple Pay கடவுச் சொல்லாகவும் பயன்படுத்த முடியும்.

எனினும் ஒரிவரின் முகத்தைப் போன்று உருவாக்கப்பட்ட மாஸ்க்கினைப் பயன்படுத்தி அன்லாக் செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டிருந்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து பயனர்கள் மீள்வதற்குள் மற்றுமொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அதாவது தனது தாயின் முகத்தினை கடவுச் சொல்லாக வழங்கப்பட்டிருந்த iPhone X கைப்பேசியினை 10 வயதான அவரது மகன் தனது முகத்தினைக் கொண்டு அன்லாக் செய்துள்ளான்.

இதனால் இக் கைப்பேசியின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

எனவே ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த கைப்பேசியில் Face ID வசதியினை நிறுத்தி Touch ID தொழில்நுட்பத்தினை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...