ஐபோன் Xல் பாதுகாப்பு குறைபாடு! ஆதாரத்துடன் வெளியான வீடியோ

Report Print Kabilan in மொபைல்

வியட்நாமைச் சேர்ந்த Bkav எனும் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் Xல் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி அதனை நிரூபித்தும் காட்டியுள்ளது.

ஐபோன் X கைப்பேசியை திறக்க உரிமையாளரின் முகத்தினை அடையாளம் காட்ட வேண்டும். ஆனால், அப்படி பயன்படுத்துபவர்களின் முகத்தினை போலவே முகமூடியைத் தயாரித்து, அதன்மூலம் கைப்பேசியைத் திறக்க முடியும் என Bkav நிறுவனம் நிரூபித்துக் காட்டியுள்ளது.

3D பிரிண்டர், சிலிக்கான் மற்றும் காகித நாடா ஆகியவற்றினைக் கொண்டு இந்த முகமூடி தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த முகமூடிகளை தயாரிக்க ஒன்பது மணிநேரம் ஆகுமாம்.

சாதாரண மக்கள் இதுபோன்ற முகமூடியை தயாரித்து ஐபோனை ஹேக் செய்ய முடியாது என்றாலும், அரசியல்வாதிகள் அல்லது தொழிலதிபர்களின் ஐபோன்களை, எவரேனும் இது போல ஹேக் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட சில முக கோணங்களில் மட்டும் தான் ஐபோன்-யை திறக்க முடியும். அதற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்க வேண்டும் Bkav நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத ஆப்பிள் நிறுவனம், பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு தான் இதுபோன்ற முகமூடிகள் ஒத்து போகும் என தன்னுடைய இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...