iPhone X கைப்பேசியில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in மொபைல்
144Shares
144Shares
ibctamil.com

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்த புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளுள் iPhone X உம் ஒன்றாகும்.

இக் கைப்பேசியின் விலை 999 டொலர்களாகக் காணப்பட்ட போதிலும் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பாரிய வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில் சில புதிய வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள குறித்த கைப்பேசியின் அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இவற்றின் வரிசையில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.

இதற்கு ஒரு புறத்தில் தனியாக இருக்கும் பொத்தானை (Side Button) அழுத்தியவாறு ஒலியினை அதிகரிக்கும் பொத்தானை (Volume Up Button) அழுத்தி பின்னர் விடுவிக்க வேண்டும்.

இதன்போது ஸ்கிரீனில் Flash தோன்றி ஸ்கிரீன் ஷாட் பதிவாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்