ரஷ்யாவில் விற்பனைக்கு வந்தது Nokia 2: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கியா நிறுவனத்தின் புதிய அன்ரோயிட் கைப்பேசிகளுள் ஒன்றான Nokia 2 ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இது ரஷ்யப் பெறுமதியில் 7,990 ரூபிள்களாக இருக்கின்றது.

அதாவது தற்போதைய நாணயமாற்று விகிதத்தின்படி 115 அமெரிக்க டொலர்களாகும்.

இக் கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 212 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4100 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்