மூன்று நிமிடங்களில் விற்று தீர்ந்த 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள்: அப்படியென்ன சிறப்பு?

Report Print Raju Raju in மொபைல்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அறிமுகம் செய்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முதல் விற்பனையில் மூன்றே நிமிடங்களில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Redmi Y1 மற்றும் Y1 Light ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் அறிமுகம் ஆனது.

இதன் முதல் விற்பனை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று தொடங்கியது.

விற்பனை துவங்கிய முதல் மூன்று நிமிடங்களில் 1.5 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளது.

இது குறித்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின், இரண்டாவது பிளாஷ் விற்பனை நவம்பர் 15-ம் திகதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5.5 inch HD Screen மற்றும் 13 MP Primary Camera வழங்கப்பட்டுள்ளது.

Dual SIM Slot, Micro SD Slot வசதிகளும் உள்ளன.

Redmi Y1 Light ஸ்மார்ட்போனில் 425 சிப்செட், 2 ஜிபி ரேம், 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி செல்பி கமெரா வசதிகள் உள்ளன, Redmi Y1-ல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி உள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்