4GB பிரதான நினைவகத்துடன் களமிறங்கியது Xiaomi Mi 6 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
46Shares

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Xiaomi தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை சீனாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Xiaomi Mi 6 எனும் குறித்த கைப்பேசியானது 5.15 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதனுடன் Qualcomm Snapdragon 835 Processor, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 350 டொலர்களாகவும், சீனப் பெறுமதியில் 2,299 யுவான்களாகவும் காணப்படுகின்றது.

விரைவில் ஏனைய நாடுகளிலும் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்