கிரடிட் கார்ட் அளவே ஆன மொபைல் சோலார் சார்ஜர்

Report Print Givitharan Givitharan in மொபைல்
82Shares

ஸ்மார்ட் கைப்பேசிகளை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதற்காக பவர் பேங்க் பயன்படுகின்றது.

எனினும் பவர் பேங்க்கினையும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியது அவசியமாகும்.

இதன் காரணமாக சோலார் சார்ஜர்களை அதிகமானவர்கள் விரும்புகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு கிரடிட் கார்ட் அளவே ஆன சார்ஜர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இச் சார்ஜரை பெல்ஜியத்தின் Brussels இலுள்ள குழு ஒன்று உருவாக்கியுள்ளது.

Sunslice எனம் குறித்த சார்ஜர் 70 கிராம் எடை கொண்டதாகவும், 60 mm x 87 mm அளவுடையதாகவும் இருக்கின்றது.

இதன் ஊடாக 3W மின்சக்தி பிறப்பிக்கப்படுகின்றது.

2018ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரவுள்ள இச் சார்ஜரின் விலையானது 79 யூரோக்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்