உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: பிரபல நிறுவனம் அறிவிப்பு

Report Print Kabilan in மொபைல்

பிரபல தயாரிப்பு நிறுவனமான குவால்காம் தனது முதல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாக 5ஜி ஸ்மார்ப்போனை வெளியிட உள்ளது.

ஸ்மார்ட்போன் செயலிகளை உருவாக்குவதில் முதலிடத்தில் உள்ள குவால்கம் நிறுவனம் 5ஜி பிணையத்தினை ஏற்கனவே உருவாக்கி விட்டது.

ஆனால், அதனை செயல்படுத்த ஒரு மோடமோ அல்லது ஸ்மார்ட்போனோ தேவை என்பதனால், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முதல் முறையாக இறங்கியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்னாப்ட்ராகன் என்னும் செயல்திறன் அதிகம் உள்ள செயலிகளின் மூலமாகவே 5ஜி பிணையம் வேலை செய்யும்.

எனவே தான் முன்னணி நிறுவனமான ஆப்பிள் கூட குவால்காமின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறது.

ஏற்கனவே, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் X50 என்ற 5ஜி மோடத்தினை குவால்காம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இப்போது அதன் மூலம் 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்பினை குவால்காம் நிறுவனம் வெளியிடாத நிலையில், அங்கு பணிபுரியும் ஒருவர் 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும், 5ஜி ஸ்மார்ட்போன் 2ஜி பிணையத்திலும் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குவால்காம் வெளியிட்டிருக்கும் வீடியோவில் 5ஜி மோடத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. இதன் வேகம் ஒரு நொடியில் 1.24 ஜி.பி.பி.எஸ் என்ற அளவில் இருக்குமாம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்