கைப்பேசிகளின் மின்கலப் பாவனையை அதிகரிக்க இதோ சில வழிகள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
163Shares

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுப்பது மின்கலத்தின் குறைந்த கால பாவனையாகும்.

அதாவது குறித்த மின்கலங்களின் சார்ஜ் ஆனது குறைந்த நேரமே காணப்படுவதுடன், மின்கலங்கள் விரைவாக பழுதடையும் சாத்தியங்களும் காணப்படுகின்றன.

இப் பிரச்சினைகளுக்கு சில நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தீர்வுகாண முடியும்.

மின்கலங்களின் பாவனையானது இரு முக்கிய காரணிகளில் தங்கியுள்ளது.

அவற்றில் ஒன்று நாள்தோறும் கைப்பேசிகளை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் என்பது.

மற்றையது கடந்த காலங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதாகும்.

இவற்றினை அடிப்படையாகக் கொண்டு மின்கலங்களை பூரணமாக சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் கைப்பேசிகளுக்காக தயாரிக்கப்படும் லிதியம் அயன் மின்கலங்கள் பொதுவாக 300 தொடக்கம் 500 தடவைகள் முழுமையாக சார்ஜ் செய்த பின்னர் அதிகபட்சமாக 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் ஆகும்.

எனவே ஆரம்பம் முதலே 100 சதவீதம் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக சில கைப்பேசிகளில் விரைவாக மின்கலத்தினை சார்ஜ் செய்யும் வசதி காணப்படுகின்றது.

இதனை தவிர்த்து சாதாரண நேரத்தில் சார்ஜ் ஆகக்கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்கலத்தின் வெப்பநிலையை சரியான பெறுமதியில் பேண வேண்டும்.

அதாவது 0 டிகிரி செல்சியஸ் தொடக்கம் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு இடையில் பேண வேண்டும்.

இதற்கு மேலாக Battery-Saving வசதியினை பயன்பத்துவதன் ஊடாகவும் மின்கலப் பாவனையை அதிகரிக்க முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்