Nokia 3310 கைப்பேசியினை அறிமுகம் செய்யும் முன்னணி நிறுவனம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகைக்கு முன்னர் கைப்பேசி உலகில் கொடி கட்டிப் பறந்த நிறுவனமாக நோக்கியா திகழ்கின்றது.

இந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Nokia 3310 எனும் கைப்பேசிக்கு அதிக மவுசு காணப்பட்டது.

குறித்த கைப்பேசியை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி தொலைபேசி வலையமைப்பு நிறுவனமாக Vodafone ஊடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் Vodafone நிறுவனம் தனது வலையமைப்பு சேவையுடன் மட்டுமே இக் கைப்பேசியினை விற்பனை செய்து வருகின்றது.

இதன் விலையானது 39 பவுண்ட்ஸ்களாக காணப்படுகின்றது.

தற்போது கடும் நீல நிறமுடைய கைப்பேசியினை விற்பனை செய்து வருவதுடன், அடுத்த மாத நடுப்பகுதியில் மேலும் சில வர்ணங்களைக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் குறித்த கைப்பேசியானது பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது.

  • Dimensions of 115.6 x 51 x 12.8 mm
  • Weight of 79.6g
  • 16MB Storage with dedicated micro SD slot (up to 32 GB)
  • 2.4 inch display with 240 x 320 pixel resolution
  • 2 MP camera phone with LED flash (inc. video)
  • Alerts include vibration and MP3 ringtones
  • 3.5mm audio jack for your headphones or earphones
  • Includes a flashlight, audio/video player, FM radio
  • Removable battery
  • allows up to: – 744 h on stand-by – 22 h of talk time – 51 h of music
  • microUSB 2.0 – Bluetooth 3.0, A2DP
  • SMS messaging

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments