வளைமேற்பரப்பு கொண்ட திரையுடன் அறிமுகமாகும் Google Pixel 2

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தற்போது சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் போட்டி போடக்கூடிய வகையில் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Google Pixel 2 எனும் குறித்த கைப்பேசியானது வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட OLED திரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல் சாம்சுங் மற்றும் LG நிறுவனங்கள் இவ்வகை கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தன.

இப் புதிய கைப்பேசியானது ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 8 கைப்பேசிகளுக்கு போட்டியாக அதே காலப்பகுதியில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் Google Pixel 2 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments