Nokia 9 ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது? விலை என்ன? இதோ விபரம்!

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது.

இதன் அடிப்படையில் அண்மையில் Nokia 6 எனும் அன்ரோயிட் கைப்பேசியினை சில வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து தனது அடுத்த கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் எண்ணியுள்ளது.

இதன்படி இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் Nokia 9 எனும் குறித்த கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய QHD திரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 22 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

கூகுளின் Android 7.1.2 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 3800 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது அமெரிக்காவில் 699 டொலர்கள் ஆகவும், ஐரோப்பிய நாடுகளில் 749 யூரோக்களாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments