Huawei அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் Huawei நிறுவனம் தற்போது மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Honor 8 Pro எனும் இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான QHD தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் Octa Core Kirin 960 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய செல்பி கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது கூகுளின் புதிய இயங்குதளமான Android 7.0 Nougat இல் செயல்படக்கூடியதாக இருக்கின்றது.

இதன் விலையானது 474.99 பவுண்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments