குறைந்த விலையில் ZTE அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சிறந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வரும் ZTE நிறுவனம் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

ZTE Prestige 2 எனும் இக் கைப்பேசியானது 5 அங்குலத்தினை உடையதும், FWVGA தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான திரையினை கொண்டுள்ளது.

இதில் 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16 GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

மேலும் இதன் சேமிப்பகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

தவிர தலா 5 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2035 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இக் கைப்பேசியின் விலையானது 79.99 டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments