ஐபோன்கள் இந்தியாவில் எப்போது தயாராகின்றன? வெளியாகியது புதிய தகவல்!

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் வைத்து தனது கைப்பேசிகளை வடிவமைக்க ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ள தகவல் ஏற்கணவே வெளியாகியிருந்தது.

இதற்கு மற்றுமொரு பிரதான காரணமாக குறைந்த உற்பத்தி செலவில் தயாரித்து அதிக இலாபத்தை ஈட்டுவதும் காணப்படுகின்றது.

இதற்காக தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நகரமான பெங்களூரை அந்நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

இன்னும் இரு மாதங்களில் இங்கு தனது சில ஐபோன் மொடல்களை தயாரிக்க ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் எண்ணியுள்ளதாக புதிய தகவல் கசிந்துள்ளது.

இவற்றுள் iPhone SE, iPhone 6 மற்றும் iPhone 6S போன்ற மொடல்கள் அடங்கும் என அத்தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments