4 நிமிடங்களில் 2,50,000 மொபைல்போன்கள் விற்பனை

Report Print Meenakshi in மொபைல்

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi-யின் புதிய தயாரிப்பான Xiaomi Redmi 4A மொபைலானது அமேசான் இணையத்தில் 4 நிமிடங்களில் 2,50,000 விற்று சாதனை புரிந்துள்ளது.

Xiaomi Redmi 4A என்ற புதிய மொடல் மொபைலின் விற்பனையானது அமேசான் தளத்திலும் mi.com தளத்திலும் நேற்று மதியம் 12மணியளவில் தொடங்கப்பட்ட அடுத்த 4நிமிடங்களில் 2,50,000க்கும் அதிகமான மொபைலானது விற்று தீர்ந்தது.

இது குறித்து அமேசன் தளத்தின் மேலாண்மை பிரிவின் இயக்குனர் நூர் பட்டேல், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விற்பனைக்கு வரும் முன்னர் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு(Notify me) தகவல் அனுப்பியதாகவும், இதுவரை ஸ்மார்ட் போன் விற்பனையில் இதுவே மிக அதிகம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் Xiaomi நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை தலைவரான ரகு ரெட்டி, அதிக அளவிற்கு Xiaomi Redmi 4A அமேசன் மற்றும் mi.com தளங்களில் விற்பனை அடைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்ததா தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் வாடிக்கையாளர்கள் கொடுக்கப்பட்ட வசதிகளும் குறைந்த விலையுமே என கூறும் ரகுரெட்டி, தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வசதிகளுடன் போன்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments