அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Vaio Phone A கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் புதிதாக கால்பதித்த Vaio நிறுவனம் புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Vaio Phone A இக் கைப்பேசியானது முதன் முறையாக ஜப்பானில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 617 Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB சேமிப்பு நினைவகம், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் இந் நிறுவனம் அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் இயங்குதளக் கைப்பேசியாக இது காணப்படுகின்றது.

இதற்கு முதல் Windows Phone இயங்குதளத்தில் செயற்படக்கூடிய கைப்பேசிகளையே அறிமுகம் செய்திருந்தது.

எனவே இதற்கான வரவேற்பினை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments