அட்டகாசமான வடிவமைப்பில் Galaxy S8: வெளியானது புகைப்படம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் இந்த மாதம் 29ம் திகதி தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S8 இனை அறிமுகம் செய்கின்றது.

இந்நிலையில் தற்போது குறித்த கைப்பேசியின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது வழமையான சாம்சுங் நிறுவனத்தின் கைப்பேசிகளை விடவும் சற்று அகலம் குறைந்ததாகவும், நீளம் கூடியதாகவும் காணப்படுகின்றது.

மேலம் கண்கவர் வடிவத்தினைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகவுள்ள குறித்த கைப்பேசியின் திரையானது 5.8 அங்குலம் உடையதாக காணப்படுகின்றது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments