அட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகமாகியது Gionee P7 ஸ்மார்ட் கைப்பேசி!

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவை தளமாகக் கொண்ட ஜியோனி நிறுவனம் Gionee P7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கைப்பேசியானது கவர்ச்சிகரமான வடிவமைப்பினை உடையதாகக் காணப்படுகின்றது.

இது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Quad Core 1.3GHz Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் சேமிப்பு நினைவகமானது micro SD கார்ட்டின் உதவியுடன் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா மற்றும் 2300 mah மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் Android Marshmallow இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசியின் விலையானது 150 டொலர்களாக இருப்பதுடன், இந்திய பெறுமதியில் 9,999 ரூபாய்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments