ப்ளாக் பெர்ரியின் கடைசி வாக்குறுதி என்ன தெரியுமா?

Report Print Aravinth in மொபைல்

பிளாக் பெர்ரி தனது கைப்பேசி தயாரிக்கும் சேவையினை நிறுத்த போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைப்பேசி தயாரிப்பில் தொடர்ந்து கோலோற்றி கொண்டிருந்த முன்னணி நிறுவனமாக ப்ளாக் பெர்ரி விளங்கியது.

இந்நிலையில் இந்த நிறுவனமானது, தனது கைப்பேசி தயாரிப்பினை நிறுத்த போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் சென் கூறியதாவது, கைப்பேசி தயாரிப்பு நிறுத்தப்படுவது உண்மை தான், ஆனால் அதற்கு முன்னதாக ஒரு கருவியை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவே நிறுவனத்தின் கடைசி போனாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் வெளியாக இருக்கும் கடைசி போனின் மெர்குரி என்ற பெயரில் இருக்கும் என கூறப்படுகிறது.

விபோ சமீபத்தில் வெளியிட்ட புதிய 'லீக்' புகைப்படங்கள் அந்த செய்தியை உறுதிப்படுத்தி அது உண்மையான ஒரு ஒப்பந்தம் தான் என்பதை நிரூபித்துள்ளது.

ஆனால், வெளியான லீக்ஸ் படங்களில் உள்ள போனானது பிராண்ட் பெயர் எதுவும் குறிப்பிடாமலும், குவெர்ட்டி கீபேட் உடனான ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் ஒரு கைப்பேசியாக காட்சியளிக்கிறது.

இதனை, சென் முன்னதாகவே ஒரு பேட்டியில் தங்களீடம் ஒரு கீபேர்ட் கைப்பேசி இருப்பதாக கூறியுள்ளார். ஒரு வேளை அது இந்த கைபேசியாக இருக்கலாம் எனவும், இது 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ப்ளாக் பெர்ரி வர்த்தகத்தை இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தெ அல்காடெல் டிடெக் 50 மற்றும் டிடெக் 60 ஸ்மார்ட்போன்கள், ஆகியவை பயன்படுத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments