எதிர்காலத்தில் இந்தியாவில் கைப்பேசிகள் இப்படித்தான் இருக்குமாம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

இப்போது உலக நாடுகளில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற கைப்பேசிகளாக 4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளே காணப்படுகின்றன.

ஏனைய வலையமைப்பு தொழில்நுட்பங்களை விடவும் 4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளே அதிகம் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக இந்தியாவில் எதிர்காலத்தில் 4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை மட்டுமே அறிமுகம் செய்யவுள்ளதாக கொரியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைப்பேசிகளை அதிகளவில் சந்தைப்படுத்தக்கூடிய நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் முன்னிலையில் காணப்படுகின்றதுடன் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கும் நாடாகவும் விளங்குகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டே இந்த அதிரடி மாற்றத்தை அந் நிறுவனம் மேற்கெள்ளவுள்ளது.

இதனை கொரியாவில் உள்ள சாம்சுங் நிறுவனத்தின் துணை இயக்குனரான Manu Sharma என்பவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments