உயிருக்கு உலை வைக்கும் ஸ்மார்ட்போன்கள்! எச்சரிக்கும் ஆய்வு

Report Print Fathima Fathima in மொபைல்

தினமும் நான் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களிலிருந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விஷ வாயுக்கள் வெளியேறுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் என்.பி.சி. டிஃபன்ஸ் இன்ஸ்டிட்யூட், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆய்வில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லித்தியம் அயன் பற்றரிகள் பயன்படுத்தப்பட்டன.

இவை அனைத்துமே விஷ வாயுக்களை வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது, அத்துடன் சூடு தாங்காமல் பற்றரிகள் வெடிக்கவும் செய்தன.

ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ஸ்மார்ட்போன்கள் முதல் வாகனங்கள் வரை லித்தியம் பற்றரிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, இதுபோன்ற பற்றரிகள் உபயோகப்படுத்துவதை பலநாடுகளும் அங்கீகரித்துள்ளன.

பற்றரிகளில் உள்ள ரசாயனப் பொருள்களும், அவை மின்னூட்டம் பெற்ற பின்னர் மின்சக்தியை வெளியேற்றும்போதும் விஷ வாயுக்கள் வெளியேறுகின்றன.

ரசாயனங்களின் தன்மைக்கு ஏற்பவும், அவை பற்றரியில் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொருத்தும், விஷ வாயு வெளியேறுகிறது.

இவை கண், சரும எரிச்சல், மூக்கு அரிப்பு போன்ற உபாதைகள் முதல் சுற்றுச்சூழலுக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளியேறும் விஷ வாயுக்களின் பெயர்கள் மற்றும் அவை வெளியேறுவதற்கான குறிப்பான காரணத்தை அறிந்து கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments