Samsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..!

Report Print Jubilee Jubilee in மொபைல்
540Shares

தண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் என வெளியிடப்பட்டிருக்கும் Samsung ஸ்மார்ட் போன் உண்மையில் தண்ணீர் உட்புகாத ஸ்மார்ட் போன் இல்லை என புகார் எழுந்திருப்பது அந்த நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Samsung நிறுவனத்தின் Galaxy S7 Active ஸ்மார்ட் போனில் தான் இத்தகைய பிரச்சனை வந்துள்ளதாக நுகர்வோரிடம் இருந்து புகார் வந்துள்ளது.

அதே சமயம் S7 மற்றும் S7 Edge போன்கள் அந்த நிறுவனம் கூறிய படி தண்ணீர் உட்புகாத படியே இருப்பதாகவும், அவை இது தொடர்பான சோதனையில் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த Samsung நிறுவனம், நாங்கள் தண்ணீர் உட்புகாத ஸ்மார்ட் போன்களை நன்றாக சோதனை செய்து பார்த்த பிறகே அறிமுகம் செய்கிறோம்.

5 அடி ஆழ தண்ணீரில் 30 நிமிடங்கள் அந்த போன்கள் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. இருப்பினும் குறைந்த அளவான புகார்களே வருகிறது.

கண்டிப்பாக அவை ஏதும் சேதமான போன்களாக இருக்கலாம். ஆயினும் இது தொடர்பான புகார்கள் மேலும் அதன் உறுதித் தன்மையை மேன்படுத்த உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது.

ஆனால் சோதனையில் Galaxy S7 Active ஸ்மார்ட்போன் 30 நிமிடம் தண்ணீரில் இருக்கும் போது போன்களின் தொடுதிரை, கமெரா, மற்றும் உட்புற பகுதி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments