பிரத்யேக இயங்குதளத்தினை உருவாக்கும் முயற்சியில் Huawei

Report Print Jubilee Jubilee in மொபைல்
பிரத்யேக இயங்குதளத்தினை உருவாக்கும் முயற்சியில் Huawei
124Shares

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன்றாக Huawei குறுகிய காலத்தில் வளர்ந்துள்ளது.

இந்நிலையில் ஏனைய சில முன்னணி நிறுவனங்களைப் போன்று தனது கைப்பேசிகளுக்கான அனைத்து வன்பொருள், மென்பொருள் பாகங்களை தானே வடிவமைக்கும் முயற்சியில் இறங்கவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக புதிய இயங்குதளத்தினை தனது கைப்பேசிகளுக்காக வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்இயங்குதளத்தினை Scandinavia நாட்டில் வைத்து உருவாக்கி வருவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட வடிவமைப்பில் இருக்கும் இப்புதிய இயங்குதள உருவாக்கத்தில் நோக்கியா நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய சிலரும் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஏனைய இயங்குதளங்களைக் காட்டிலும் புதிய பல அம்சங்கள் மற்றும் பயனர் இடைமுக மாற்றங்கள் என்பவற்றினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.

எனினும் இந்த இயங்குதளம் பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments