விமான நிலையத்தில் சிக்கிய நபர்: சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் வயிற்றுக்குள் வைர கற்களை மறைத்து வைத்து கடத்த முயன்ற வெளிநாட்டவரை சுங்க அதிகாரிகள் சாமர்த்தியமாக கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டவரான பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.

அவரை விசாரணைக்கு உட்படுத்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் இறுகியுள்ளது. உடனடியாக ஷார்ஜா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஸ்கானரில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதில் அவரது வயிற்றுக்குள்ள் 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மருத்துவர்களின் உதவியுடன், அந்த நபரின் வயிற்றில் இருந்து 3 பொட்டலங்களை வெளியே எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த பொட்டலங்களில் சுமார் 90,000 டொலர் மதிப்பிலான 297 கிராம் வைர கற்களை அவர் மறைத்து எடுத்து வந்தது அம்பலமானது.

மட்டுமின்றி ஐக்கிர அமீரகத்திற்கு இதற்கு முன்னர் பலமுறை வந்து சென்றதாகவும், ஆனால் கடத்தலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை எனவும் அவர் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி தாம் எடுத்துவந்த வைர கற்கள், விலை அதிகமாக தரும் வாடிக்கையாளருக்கு விற்கவும் முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்