இதையெல்லாம் விமானத்தில் எடுத்துவரக்கூடாது: பொலிசார் வெளியிட்ட பட்டியல்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் இருந்து விமானத்தில் செல்லும்போது எடுத்துச் செல்லக்கூடாத பொருட்களின் பட்டியலை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.

துபாய் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் படி, ரசாயனப் பொருட்கள், பெரிய அளவிலான உலோகங்கள், பேட்டரி, டார்ச் லைட்,

தீப்பற்றக்கூடிய பொருட்கள், அதிக அளவிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், கார் உதிரிபாகங்கள் போன்ற 15 பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு உணவுப் பொருட்களை வெளிநாட்டுப் பயணிகள் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச அளவில் புழக்கத்தில் இருக்கும் குறிப்பிட்ட மருந்துகள் ஐக்கிய அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால், அந்த பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

எச்சரிக்கை அறிவிப்பை மீறி இந்த பொருட்களை எடுத்து வருபவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்