அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 48 வது ஐக்கிய அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஒரு இளம் எமிராட்டி சிறுமியை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
48 வது ஐக்கிய அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு, சவுதி மகுட இளவரசர் முகமது பின் சல்மானுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபுதாபியின் மகுட இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் கலந்துகொண்டார்.
அவர்கள் இருவரும் நடந்துவரும் போது சிறுமிகள் பலரும் அவர்களுடன் கைகுலுக்கினர். எதிர்பாராத விதமாக ஆயிஷா என்கிற சிறுமிக்கு மட்டும் இளவரசர் கைகுலுக்க தவறவிட்டு நடந்து சென்றுவிட்டார்.
الله يحفظك سيدي .. آمين 🇦🇪♥️ pic.twitter.com/dU3GqgeMtw
— الفلاحي 🇦🇪 (@UAE7777KSA) December 2, 2019
இதனால் அந்த சிறுமி ஏமாற்றமடைவதை போல இருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. அதன்பின்னரே இதனை அறிந்துகொண்ட இளவரசர், உடனடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்