சவுதி ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையால் சுட்டு வீழ்த்திய ஹவுத்தி.. தீயில் கருகி வீரர்கள் பலி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவின் எல்லைக்கு அருகே அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு தெரிவித்துள்ளது.

சவுதியின் தென்மேற்கில் உள்ள அசிர் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சவுதி அரேபியாவின் எல்லைக்கு அருகே ராணுவ அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாகவும், அதன் இரண்டு விமானிகளும் கொல்லப்பட்டதாகவும் ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு தெரிவித்துள்ளது.

அசிர் பகுதியில் சவுதி அப்பாச்சி ஹெலிகாப்டர் வான்வழி ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

மேலும் அது முழுமையாக எரிந்ததால் அதன் இரண்டு விமானிகளும் கொல்லப்பட்டனர் என்று ஹவுத்தி குழுவின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா அஸ்ரி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஹவுத்தி குழுவுடன் போராடி வரும் சவுதி தலைமையிலான கூட்டுப்படை தரப்பில் இருந்து உடனடியாக இத்தாக்குதல் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்