உலகையே உலுக்கும் ஐ.எஸ் தொடர்பில் துருக்கி முக்கிய அறிவிப்பு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஜிகாதி தாக்குதல்களால் உலகையே அச்சுறுத்திய வரும் ஐ.எஸ் தொடர்பில் துருக்கி உள்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சிரியாவில் பதுங்கியிருந்து ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி, அமெரிக்க சிறப்பு படை முன்னெடுத்த நடவடிக்கையின் போது தற்கொலை செய்துக்கொண்டார். பாக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ் குழுவின் முக்கிய நபரை உயிருடன் பிடித்துள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் Suleyman Soylu தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறிய Suleyman Soylu, காவலில் உள்ள முக்கிய நபர் குறித்த எந்த தகவலையும் வழங்கவில்லை.

கொல்லப்பட்ட ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியின் மனைவிகளில் ஒருவர், அவருடைய சகோதரி, மகள் என குடும்ப உறுப்பினர்கள் பலரை கைது செய்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

குர்திஷ் தலைமையிலான படைகளை வடகிழக்கு சிரியாவிலிருந்து விரட்டியடிப்பதற்கான சமீபத்திய ராணுவத் தாக்குதல் ஐ.எஸ் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து, ஐ.எஸ் உறுப்பினர்களைப் பிடிக்க துருக்கி தனது முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்