ஈராக்கில் மேலும் ஒரு பெண் மாயம்... அரசுக்கு எதிராக போராடுபவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈராக்கில் ஆளும் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சமூக செயற்பாட்டாளர் மாயமாகியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின்படி, ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களில் ஒருவரான ஈராக் சமூக செயற்பாட்டாளர் மேரி முகமதே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு உதவுவதில் பிரபலமான மேரி முகமதின் கடத்தலைக் கண்டித்த ஈராக் ஆர்வலர்கள், அவர் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக ட்வீட் செய்துள்ளனர்.

மத்திய மற்றும் தெற்கு ஈராக் மாகாணங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற ஆர்வலர்கள் மற்றும் பிளாக்கர்களை குறிவைத்து ஈரானிய ஆதரவு போராளிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சில போராட்டகாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈராக்கில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாட்டில் காணாமல் போன இரண்டாவது பெண் ஆர்வலர் முகமது ஆவார்.

alarabiya

நவம்பர் 2ம் தேதி, ஈராக் ஆர்வலரும் மருத்துவருமான Siba al-Mahdawi பாக்தாத்தில் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இரவில் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டார்.

ஈராக்கிய மனித உரிமைகள் உயர் ஆணையம், இந்த வழக்கை விசாரிக்க அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினருக்கும் உத்தரவிட்டது.

லொறிகளில் ஆயுதம் ஏந்திய, முகமூடி அணிந்த மர்ம நபர்களால் தனது மகள் கடத்தப்பட்டதாக al-Mahdawi-யின் தாயார் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஈராக்கிய அதிகாரிகளிடம் al-Mahdawi -யின் நிலையை வெளிப்படுத்துமாறு கோரியது. மேலும்,ஈராக்கில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தான் அவர் கடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து கடத்தப்பட்ட 26 ஈராக்கியர்களின் நிலை தெளிவற்றது. பாஸ்ரா மற்றும் பாக்தாத்தில் மூன்று ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர், சுமார் 400 ஆர்வலர்கள், மற்றும் பிளாக்கர்கள் நாட்டின் தெற்கு மற்றும் மைய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்