வீட்டுக்கு நெருப்பு வைத்துவிட்டு... சொந்த பிள்ளைகளை அறைக்குள் வைத்து பூட்டிய தாயார்: நடந்த கொடூரம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகள் விவகாரத்தில் அவர்களின் தாயாரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஃபுஜைரா மாகாணத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி குடியிருப்பு ஒன்று தீக்கிரையானதாக மீட்பு குழுவினருக்கு தகவல் பறந்தது.

தகவல் அறிந்த ஐக்கிய அமீரக மீட்பு குழு சாதனை நேரத்தில் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ஆனால் அவர்களால் அந்த குடியிருப்புக்குள் ஒரு அறையில் தூக்கத்தில் இருந்த 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 7 பிள்ளைகளை உயிருடன் மீட்க முடியாமல் போனது.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த பிள்ளைகள் ஏழு பேரும் தூங்கிய அறை வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்தது எனவும்,

வீடு தீப்பற்றி எரிந்தும், சம்பவத்தின்போது குடியிருப்பில் இருந்த தாயார் தமது பிள்ளைகளை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

(M. Sajjad/Khaleej Times)

பிள்ளைகள் படுத்திருந்த அறைக்குள் நச்சுப் புகை புகுந்து, 4 பெண் பிள்ளைகள் உள்ளிட்ட 7 பேரும் தப்பிக்க வழியின்றி மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளதாக தெரியவந்தது.

அதிகாலை 4.50 மணியளவில் அந்த வீடு தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் அந்த தாயார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சொந்த பிள்ளைகளை கொலை செய்வதற்காக வீட்டுக்கு நெருப்பு வைத்தாரா? இல்லை, கணவர் மற்றும் குடும்பத்தார் மீது கொண்ட வெறுப்பால் பிள்ளைகளை பழி வாங்கினாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படு வருகிறது.

இந்த விவகாரத்திற்கு பின்னர் ஐக்கிய அமீரகத்தின் 7 மாகாணங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் smoke detector கருவி பொருத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தீவிரமாக அமுல் படுத்தப்பட்டது.

(M. Sajjad/Khaleej Times)
(Supplied photo)

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்