சிரியாவில் குண்டு மழை.. சூரையாடிய ரஷ்ய போர் விமானங்கள்: இதுவரை 4,351 பேர் கொல்லப்பட்டனர்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக பிராந்தியத்தில் நிலைமையை கண்காணித்து வரும் குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான மண்டலமாக கருதப்படும் இட்லிப் கிராமப்புறத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை காலை ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தது.

இத்தாக்குதலில் குழந்தைகளின் மருத்துவமனை குறிவைக்கப்பட்டு ஐந்து மருத்துவ ஊழியர்கள் காயமடைந்தனர் என்று மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

ரஷ்ய போர் விமானங்கள் சுமார் 12 முறை தாக்குதல் மேற்கொண்டதாகவும், ஏப்ரல் 30 முதல் பாதுகாப்பு மண்டலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,371 ஆகும் என கண்காணிப்பு குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக புதன்கிழமை, வடகிழக்கு சிரியாவின் சர்காரக் கிராமத்தில் டிரோன்களைப் பயன்படுத்தி துருக்கிய ஆதரவு படைகள் கோதுமை குழிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் ஒரு ஆம்புலன்சை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியில் துருக்கிய ஆதரவு படைகளுக்கும் சிரிய ஜனநாயக படைகளுக்கும் (எஸ்.டி.எப்) கடும் மோதல் நடந்தது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் எஸ்.டி.எப் தளங்களை குறிவைத்து துருக்கிய விமானம் டெல் டேமரின் மீது சுற்றிக் கொண்டிருக்கிறது.

இதன் விளைவாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு எஸ்.டி.எப் போராளிகள் கொல்லப்பட்டனர் என கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, வடகிழக்கு சிரியாவில் உள்ள டெல் டேமர் நகருக்கு அருகே ஈராக் எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவப் படை மீது

துருக்கிய ஆதரவு போராளிகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்