தலையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரால் பரபரப்பு

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

தலையில் துப்பாக்கியுடன் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குவைத் பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள வீடியோவின் படி, ஒரு இளைஞர் தன்னுடைய தலையில் துப்பாக்கியை வைத்தபடி விமான நிலையத்திற்குள் நுழைகிறார்.

யாராவது தனக்கு அருகில் வந்தால் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாக மிரட்டிக்கொண்டே நடந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவமானது குவைத்தில் கடந்த இரண்டு நாட்களில், வேறு இரண்டு இளைஞர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

"குவைத் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபர் 29 வது வாயிலை அடையும் வரை அவரை விமான நிலையத்தின் வழியாக செல்ல அனுமதித்ததாகவும், அதன்பின்னர் அவரை கைது செய்ததாகவும் பத்திரிகையாளர் மிஷரி புயாபி வீடியோவில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஆனால் இதுகுறித்து குவைத் விமான நிலையம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்