எதிர்கால முதலீடு - சவுதியில் உரையாற்றிய பிரதமர் மோடி

Report Print Abisha in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி எதிர்கால முதலீடு குறித்து உரையாற்றி உள்ளார்.

சுவுதி அரேபியாவின் மன்னரின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி இருநாள் பயணமாக சவுதிக்கு சென்றார்.

அங்கு, சவுதி அரேபிய நாட்டின் சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மோஷேன் அல்-ஃபட்லி மற்றும் எரிசக்தி துறை மந்திரி அப்துல் அஜிஸ் பின் சல்மான் அல் சவுத் ஆகியோரையும் சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், பிரதமர் மோடி சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத்-ஐ சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

மேலும், ரியாத் நகரில் நடைபெற்று வரும் எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்