ஈரானில் முதல் முறையாக பெண்களுக்கு இதற்கு அனுமதி: திரண்ட பெண்கள்!

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானில் முதல்முறையாக விளையாட்டு மைதானங்களுக்கு சென்று கால் பந்து விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிக்க பெண்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஈரான், கால் பந்தாட்ட ரசிகைகள் விளையாட்டு மைதானங்களுக்கு சென்று கால் பந்து விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து டிக்கெட் விற்பனை தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அவர்கள் 2022 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால் பந்தாட்டப்போட்டிகளுக்கான தகுதிப்போட்டிகளில் ஈரானும் கம்போடியாவும் மோதும் போட்டிக்கான அத்தனை டிக்கெட்களையும் வாங்கிக் குவித்தனர்.

பெண்களை விளையாட்டுக்களை காண அனுமதிக்காவிட்டால், ஈரான் கால் பந்தாட்ட கூட்டமைப்பிலிருந்து நீக்கப்படும் என FIFA எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

40 ஆண்டுகளாக ஈரான் கால் பந்தாட்ட ரசிகைகள் விளையாட்டு மைதானங்களுக்கு சென்று கால் பந்து விளையாட்டுப் போட்டிகளை கண்டு களிக்க தடை விதித்திருந்தது.

ஆண்கள் கூட்டம் நிறைந்திருப்பதும், முழுமையான உடை அணியாத ஆண்களை பெண்கள் பார்க்கவேண்டி வரும் என்பதாலும் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் FIFA, ஆண்கள் விளையாடும் கால் பந்து போட்டிகளை காண பெண்களை விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என ஈரானுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், 'Blue Girl' என்று அழைக்கப்படும் Sahar Khodayari என்னும் இளம்பெண், கால் பந்தாட்டப் போட்டிகளை காணும் ஆர்வத்தில் ஆண் உடை அணிந்து விளையாட்டு மைதானம் ஒன்றிற்குள் நுழைய முற்படும்போது கைது செய்யப்பட்டார்.

சிறையிலடைக்கப்படுவோம் என பயந்த அவர், நீதிமன்றத்தின் முன்பு தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டதில் தீயில் எரிந்து சென்ற மாதம் பரிதாபமாக உயிரிழந்ததும் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்