கிராமத்தில் ஏராளமானோருக்கு எய்ட்ஸ்.. வன்முறை பூமியான ஈரான்: தீப்பற்றி எரியும் மாகாணம்:

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானில் எச்.ஐ.வி பரவியதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று Charmahal-Bakhtiari மாகாணத்தில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன.

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ஏராளமான கிராமவாசிகள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக Lordegan நகரில் உள்ள Chenar Mahmoud கிராமத்தின் உள்ளுர்வாசிகள் தெரிவித்தனர்.

நீரிழிவு பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது உள்ளுர் சுகாதார அதிகாரிகள், பல நபர்களுக்கு அசுத்தமான ஊசிகளை பயன்படுத்தினர் என்று போராட்டகாரர்கள் குற்றம் சாட்டினர். இதனால், சுமார் 200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Lordegan நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியின் பிரதிநிதியின் அலுவலகத்தைத் தாக்கி தீ வைத்துள்ளனர். மேலும், ஆளுநரின் கட்டிடம், உள்ளுர் சுகாதார மையம் மற்றும் பொலிஸ் வாகனங்களையும் தாக்கி தீ வைத்துள்ளனர்.

ஆர்பாட்டகாரர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றுள்ளனர். உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி, 12-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Chenar Mahmoud கிராமத்தில் எச்.ஐ.வி பரவுவதற்கு அசுத்தமான ஊசிகள் தான் காரணம் என்ற கூற்றை ஈரானின் சுகாதார அமைச்சர் Saeed Namaki நிராகரித்துள்ளார்.

மாறாக, கிராமத்தில் எச்.ஐ.வி பரவியதற்கு கிராமத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேடானவர்கள் தான் காரணம் என்று Namaki குற்றம் சாட்டியுள்ளார்.

فیلم دیگری از به آتش کشیده شدن دفتر امام جمعه در #لردگان pic.twitter.com/g7Hq9LxnYo— اعتراض مدنی بازار (@EterazB) October 5, 2019

பாராளுமன்ற உறுப்பினர் Mohammad Hossein Ghorbgani-யும் போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Chenar Mahmoud கிராமத்தின் 1,800 மக்கள் தொகையில், 240 பேர் போதைக்கு அடிமையாக உள்ளனர், அவர்களில் 20 பேர் ஊசிகளைப் பயன்படுத்துகிறார்கள், அதுவே எய்ட்ஸ் பரவுவதற்கு வழிவகுத்தது என்று கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்