உளவு பார்த்த ஆளில்லா மர்ம விமானம்... சுட்டு வீழ்த்திய ராணுவத்தினர்: ஆய்வில் தெரியவந்த சதிதிட்டம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஏமனில் உளவு பார்த்த ஈரான் ஆளில்லா விமானத்தை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நாட்டின் வடமேற்கில் உள்ள Hajjah மாகாணத்தில் ஈரானிய தயாரித்த ட்ரோனை, ஏமன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏமன் பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத்தளத்தின்படி, ட்ரோன் இப்பகுதியைச் சோதனையிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுத்தி போராளிகளுக்கு சொந்தமான ட்ரோன், Hiran மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகளை உளவு பார்த்ததாக கண்டறிந்ததை அடுத்து சுட்டுக் வீழ்த்தப்பட்டதாக ஏமன் ராணுவம் கூறியுள்ளது.

ட்ரோன் கீழே விழுந்த பின்னர் மேற்கொண்ட ஆய்வில் அது ஈரானிய தயாரிப்பானது என்பது தெரியவந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து Hajjah மாகாணத்தின் மீது பறந்ததால் ஏமன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட 8வது ட்ரோன் இதுவகும், பெரும்பாலான ஆளில்லா விமானங்கள் வெடிபொருட்களைக் கொண்டு வந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுத்திகள் தங்கள் வெடிபொருட்கள் நிறைந்த ட்ரோன்கள் மற்றும் விமானங்களை தீவிரப்படுத்தியுள்ளனர், ஆயுதங்கள் நாட்டிற்கு வெளியே உள்ள தொடர்புகளால் தயாரிக்கப்பட்டு ஏமனுக்கு அனுப்பப்படுகிறது என ஐ.நா. நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.

ஈரான் தயாரித்த 'Ababil-T' ஆளில்லா விமானங்களுடன், ட்ரோன்கள் ஒத்துப்போவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்