சவுதி அரேபிய அரசின் தாராளம்: இனி இவர்களும் ஹொட்டல்களில் தங்கலாம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

வெளிநாடுகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் சவுதியில் உள்ள ஹொட்டல்களில் தங்குவதற்கு உறவு முறை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை என சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இந்த புதிய சட்ட திருத்தமானது சவுதி அரேபிய பெண்களுக்கும் பொருந்தும் எனவும் தெரியவந்துள்ளது.

சவுதி அரேபிய பெண்களுக்கு தனியாக ஹொட்டல்களில் தங்கும் உரிமை இதுநாள் வரை மறுக்கப்பட்டு வந்துள்ளது.

மேலும், வெளிநாட்டு ஆண் மற்றும் பெண் இங்குள்ள ஹொட்டல்க:ளிள் தங்குவதற்கு உறவு முறை தொடர்பான ஆவணங்களை காட்ட வேண்டும்.

இருப்பினும் தற்போது சவுதி குடிமக்கள் ஹொட்டல்களில் தங்குவதற்கு அவர்களின் அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களுக்கு இனிமேல் அது தேவையில்லை.

கடந்த வாரம் சவுதி அரேபியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக 49 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு பெண்கள் இனிமேல் கட்டாய முகத்திரை அணியவும் தேவையில்லை என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஆனால் பொதுமக்களை பாதிக்காத வகையில் ஆடை உடுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது. மதுவுக்கு இருக்கும் தடை சட்டம் தற்போதும் அமுலில் உள்ளது.

இந்த சட்ட மாற்றங்களால் ஆண்டுக்கு 100 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என சவுதி அரேபியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்