தாக்குதல் நடத்தி.. சவுதி நகரத்தை கைப்பற்றிய வீடியோவை ஒளிபரப்பியது ஹவுத்தி: 1000 கணக்கான வீரர்கள் சரண்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி எல்லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் Najran நகரத்தை கைப்பற்றிய வீடியோ காட்சிகளை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு ஒளிபரப்பியுள்ளது.

சமீபத்தில் தொலைக்காட்சி நேரலையில் பேசிய ஹவுத்தி குழுவின் ராணுவ செய்தி தொடர்பாளர் Yahya Sarea, Najran-வில் ஹவுத்தி நடத்திய தாக்குதலில் ராணுவ ஆயுதங்கள் மற்றும் வீரர்கள் என மூன்று சவுதி கூட்டுப்படைகளின் தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டது என கூறினார்.

மேலும், Najran நகரத்தின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் அறிவித்தார். 72 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், உயிருக்கு பயந்த ஆயிரம் கணக்கான வீரர்கள் ஹவுத்தியிடம் சரணடைந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய தாக்குதலின் வீடியோவை ஹவுத்தி ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோவில், பல வாகனங்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டு கிடக்கிறது. ராணுவ வீரர்கள் வரிசையாக சரணடைகின்றனர்.

சவுதி அடையாளங்களுடன் உள்ள பாதுகாப்பு வாகனங்கள் சில தீப்பிடித்து எரிகின்றன, பெரிய அளவிலான குவியல்களும், வெடிமருந்துகளும் ஹவுத்தியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சவுதி ராணுவ சீருடையில் பலர் இறந்து கிடக்கின்றனர், சரணடைந்த பலர் தங்களை சவுதிகளாக அடையாளப்படுத்தி கொள்கின்றனர். எனினும், தற்போது வரை ஹவுத்தி நடத்திய தாக்குதல் தொடர்பில் சவுதி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்