சவுதி அரேபியாவை குறிவைத்து ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு ஏவிய ஏவுகணைகள் தொடர்பில் சவுதி கூட்டுப்படையின் செய்திதொடர்பாளர் கர்னல் Turki Al Maliki அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஏமன் தலைநகர் சனாவிலிருந்து ஹவுத்தி போராளிகள் ஏவுகணைகளை ஏவினர், ஆனால், அது வடக்கு மாகாணமான சதாவில் விழுந்து விபத்துக்குள்ளானது. சவுதியை தகர்க்க முயன்ற ஹவுத்தியின் சதிதிட்டம் தோல்வியில் முடிந்தது.
நூற்றுக்கணக்கான பொதுமக்களை அச்சுறுத்தும் ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி வருகின்றனர்,
ஹவுத்திகளின் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை அழிக்க அரபு கூட்டுப் படையின் கடுமையான நடவடிக்கை தொடரும். ஏமன் பொதுமக்கள், பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பைப் பாதுகாக்கவும் நடவடிக்கை தொடரும் என கர்னல் Turki Al Maliki அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்