சவுதி எல்லையில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு அந்நாட்டின் Najran நகரத்தின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு அறிவித்துள்ளது.
இச்செய்தியை ஹவுத்தி குழுவின் ராணுவ செய்தி தொடர்பாளர் Yahya Sarea தொலைக்காட்சி நேரலையில் அறிவித்ததாக ஹவுத்தி தொலைக்காட்சியான al-Masirah செய்தி வெளியிட்டுள்ளது.
Najran-வில் ஹவுத்தி நடத்திய தாக்குதலில் ராணுவ ஆயுதங்கள் மற்றும் வீரர்கள் என மூன்று சவுதி கூட்டுப்படைகளின் தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டது என Yahya Sarea கூறியதாக மேற்கோள்காட்டி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி ராணுவ வீரர்கள், அதிகாரிகள் என சுமார் ஆயிரம் எதிரி நாட்டு படையினரை சிறைபிடித்து உள்ளோம், ராணுவ நடவடிக்கையின் போது 12-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் என Yahya Sarea கூறியுள்ளார்.
இந்த ராணுவ நடவடிக்கை சுமார் 72 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சவுதியின் Najran நகரத்தின் பல பகுதிகள் தங்கள் படையின் கட்டுபாட்டில் உள்ளது, சிறைபிடிக்கப்பட்ட நபர்கள் பத்திரமாக மறைமுகமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் ராணுவ நடவடிக்கையின் வீடியோக்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், தற்போது வரை ஹவுத்தி நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் குறித்து இதுவரை சவுதி உறுதிப்படுத்தவில்லை.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்