இனி பெண் சுற்றுலாப்பயணிகள் பர்தா அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது சவுதி!

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

இனி எண்ணெய் வியாபாரத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்பதை நன்றாக அறிந்துகொண்டுள்ள சவுதி அரேபியா, சுற்றுலாத்தொழிலில் கவனம் செலுத்துவதற்காக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

எனவே, முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்குவது என சவுதி அரேபியா முடிவுசெய்துள்ளது.

இன்று முதல் பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட 49 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்கப்படும்.

விசா கட்டணம் சுமார் 80 டொலர்கள் (65 பவுண்டுகள்), பயணக் காப்பீடு 40 டொலர்கள் என Arab News என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுலா வரும் வெளிநாட்டுப்பெண்கள் இனி முழு உடலையும் மறைக்கும் பர்தா அணியத்தேவையில்லை, மரியாதைக்குரிய விதத்தில் உடை அணிந்தால் போதும் என்பது உள்ளிட்ட அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது சவுதி அரேபியா.

செப்டம்பர் 14 அன்று சவுதியின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் ஈரானால் தாக்கப்பட்டதையடுத்து, எண்ணெயை மட்டும் நம்பி பயனில்லை என முடிவுசெய்துள்ள சவுதி அரேபியா, சுற்றுலா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்