இதுவரை 91,000 பேர் பலி..! சவுதி படைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹவுத்தி பதிலடி.. பலர் கொல்லப்பட்டதாக தகவல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஏமனில் உள்ள சவுதி கூட்டுப்படையினர் மீது அந்நாட்டு படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பிராந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏமனின் வடமேற்கு மாகாணமான Hajjah-வில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலம் சவுதி கூட்டுப்படையினரை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயரிடப்படாத ராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டி, ஏமன் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில், Zelzal-1 (Earthquake-1) ஏவுகணை மூலம் Heyran மாவட்டத்திற்கு தெற்கே சவுதி கூட்டுப்படையினரை வெற்றிகரமாக தாக்கியதாக தெரிவித்துள்ளது.

ஏவுகணை அதன் நியமிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி பல கூட்டுப்படையினரைக் கொன்றது அல்லது காயப்படுத்தியது என்று அறிக்கை கூறியது.

சவுதிக்கு பதிலடி கொடுக்க ஏமன் ராணுவம் ஒரே மாதிரியான ஆறு ஏவுகணைகளைக் கொண்டு அதே பகுதியை குறிவைத்து, குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சவுதி படையினரைக் கொன்றது அல்லது காயப்படுத்தியது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி போருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் படைகள் சவுதி அரேபியாவிற்குள் அதன் பிராந்தியங்களை தொடர்ந்து குறிவைக்கின்றன. நாட்டின் ரியாத்-நட்பு முன்னாள் ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கும், பிரபலமான ஹவுத்தி அன்சாருல்லா இயக்கத்தை நசுக்குவதற்கும் 2015 மார்ச் மாதம் முதல் ஏமன் மீதான சவுதி போர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் சவுதி போர் 91,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ACLED என்ற இலாப நோக்கற்ற மோதல்-ஆராய்ச்சி அமைப்பு மதிப்பிடுகிறது.

ஏமன் நாட்டின் உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளை அழித்து போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 24 மில்லியனுக்கும் அதிகமான ஏமனியர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்