பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு தான் பொறுப்பேற்பதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புக்கொண்டுள்ளார்.
2018 அக்டோபர் மாதம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டாது உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்போதிருந்து, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்த நடவடிக்கையில் தனது ஈடுபாட்டைப் பற்றி மௌனம் காத்து வந்தார், கஷோகி கொலைக்கு இளவரசர் உத்தரவிட்டதாக சிஐஏ குற்றம்சாட்டியது, ஆனால் சவுதி அதிகாரிகள் மறுத்தார்கள்.
இப்போது, FRONTLINE நிருபர் மார்ட்டின் ஸ்மித்துடனான புதிய உரையாடலின் போது, சவுதி தலைவர் சல்மான் முதல் முறையாக கஷோகியின் கொலையில் தனது பங்கைப் பற்றி பேசியுள்ளார்.
இது எனது கண்காணிப்பில் நடந்தது என்று சவுதி இளவரசர் ஸ்மித்திடம் கூறியுள்ளார். இதில் எனக்கு எல்லாப் பொறுப்பும் இருக்கிறது, ஏனென்றால் அது எனது கண்காணிப்பின் கீழ் நடந்தது என கூறியுள்ளார்.
ஆனால், அது தனக்குத் தெரியாமல் நடந்தது என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

சவுதி இளவரசரின் இந்த உரையாடல் FRONTLINE-ன் வரவிருக்கும் சீசன் பிரீமியரில் ஆக்டோபர் 1ம் திகதி வெளியிடப்படவுள்ளது, இதில் சவுதி இளவரசரின் எழுச்சி, அவரது ஆட்சி மற்றும் கஷோகியின் கொலையைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுடனான அவரது தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்