மீண்டும் ஏவுகணை தாக்குதல்.. 7 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்களை கொன்று குவித்த சவுதி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஏமனில் முறையான அரசாங்கத்தை ஆதரிக்கும் சவுதியின் அரபு கூட்டணி செவ்வாய்க்கிழமை மாலை சனாவிலிருந்து ஹவுத்தி போராளிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தி அழித்ததாக தெரிவித்துள்ளது.

ஏமன் பிரதேசங்களான அம்ரான் மற்றும் சாதாவில் தாக்குதல் நடத்த ஏவப்பட்ட இரு ஏவுகணைகளையும் அரபு கூட்டணியின் வான் பாதுகாப்புப்படை அழித்துள்ளது.

முன்னதாக செவ்வாயன்று, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி போராளிகள் மேற்கு மத்திய ஏமனில் உள்ள அம்ரான் மாகாணத்தில் இருந்து ஏவுகளைக ஏவியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏமனில் உள்ள அரபு கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் Turki al-Maliki கூறுகையில், ஹவுத்திகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்துவதன் மூலமும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதன் மூலமும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக கூறினார்.

பொதுமக்களை பாதுகாக்க அரபு கூட்டணி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றார்.இந்த திறன்களை நடுநிலையாக்குவதற்கும் அழிப்பதற்கும், ஹவுத்திகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த கூட்டணியின் கூட்டுப் படைகளின் தலைமையை வலியுறுத்தினார்..

அதே சமயம் செவ்வாயன்று ஏமனின் தெற்கு Daleh மாகாணத்தில் அரபு கூட்டுப்படை நடத்திய வான் தாக்குதலில் 7 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் மீதான சவுதியின் கொடூர தாக்குதலுக்கு ஹவுத்தி போராளிகள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்