சவுதியை மீண்டும் கதிகலங்க வைத்த மர்ம டிரோன்கள்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் டிரோன் செயல்பாடு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாயின் சர்வதேச விமான நிலையத்திலே விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களைத் திருப்பிவிட வேண்டியிருந்தது, அதே நேரத்தில் அண்டை நாடான ஷார்ஜாவின் சிறிய விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டிரோன் செயல்பாடு காரணமாக சந்தேகத்திற்கிடமான நிலையில் ஞயிற்றுக்கிழமை பிற்பகல் 12:36 முதல் 12:51 வரை துபாய் சர்வதேச விமான வருகை தடைபட்டுள்ளது என்பதை விமான நிலையம் உறுதிப்படுத்தியது.

சமீபத்திய ஆண்டுகளில் பொழுதுபோக்கு டிரோன்களால் பல முறை விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன, கடைசியாக பிப்ரவரி மாதம் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.

எவ்வாறாயினும், சவுதி அரேபியா மீது கடந்த வாரம் நடந்த தாக்குதல்கள் உட்பட சவுதி அரேபியா மீது தாக்குதல்களை நடத்த ராணுவ டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்திய இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை குறிவைத்து தாக்க ராணுவ டிரோன்களைப் பயன்படுத்துவதாக மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்