விமானத்தில் செல்லவிருந்த பாக். பிரதமர் இம்ரானை தடுத்த இளவரசர்... சவுதியின் சிறப்பான அந்தஸ்து அளிப்பு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு இளவரசர் சிறப்பு அந்தஸ்து அளித்து அசத்தியுள்ளார்.

இம்ரான் கான் வணிக விமானத்தைப் பயன்படுத்துவதை தடுத்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், நீங்கள் எங்கள் சிறப்பு விருந்தினர், நீங்கள் எனது சிறப்பு விமானத்தில் அமெரிக்காவுக்குச் செல்வீர்கள் என்று கோரியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சனிக்கிழமை இம்ரான் கான், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவை சென்றடைந்தார்

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் Shah Mehmood Qureshi கூறுகையில், பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவை அடைந்துவிட்டார். காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் ஏழு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு, காஷ்மீர் பிரச்னையில் ஆதரவைத் திரட்டுவதற்காக இம்ரான் கான் இரண்டு நாள் சவுதி அரேபியாவுக்குச் சென்றார்

சவுதி அரேபியாவில், இம்ரான் கான், இளவரசர் Salman bin Abdulaziz Al Saud-ஐ சந்தித்து வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகள் தவிர காஷ்மீர் பற்றி விவாதித்தார் என கூறினார்.

ஐ.நா சபையின் 74வது அமர்வில் பங்கேற்க இம்ரான் கான் சனிக்கிழமை சவுதி அரேபியாவிலிருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்டார்.

கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதியான இம்ராம் கான், ஐ.நா பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 27ம் திகதி அன்று உரையாற்றவுள்ளார். அவரின் உரையாடல் காஷ்மீர் மீதான இந்தியாவின் நகர்வை மையமாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அமைப்பின் பொறுப்பான உறுப்பினராக வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்துவார் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்