சவுதியை நாசம் செய்தது ஈரான் என நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பா இது நடந்தே தீரும்: எச்சரித்த பேரரசு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் செப்டம்பர் 14ம் திகதி அராம்கோ எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க சவுதி பேரரசிற்கு பல வழிகள் உள்ளன என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் Adel al-Jubeir எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து Adel al-Jubeir கூறுகையில், தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது குறித்து கண்டறிய விசாரணைக் குழு ஆராய்ந்து வருகிறது.

தாக்குதல் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வழிகள் குறித்து நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா உடனும், பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கும் இடையில் ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

சவுதி பேரரசு அமெரிக்காவுடன் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்பட்டு வருகிறது. தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டால், சர்வதேச சமூகம் தனது பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கான விலையை ஈரானை செலுத்த வைக்க வேண்டும் என்று al-Jubeir கூறினார்.

Khomeini புரட்சிக்குப் பின்னர் ஈரான் சவுதி அரேபியா மீது போரை நடத்தி வருவதாகவும் அல்-ஜுபைர் கூறினார். ஈரானின் முரணான நடத்தை சர்வதேச விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறுகிறது என்று விளக்கினார்.

ஐரோப்பிய நாடுகள் தாக்குதலை கடுமையாக கண்டித்தனர் என்று சுட்டிக்காட்டினார், மேலும், ஈரானை கையாளும் விதத்தை ஐரோப்பிய நாடுகள் கடுமையானதாக ஆக்கும் என்று சவுதி எதிர்பார்க்கிறது.

தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய al-Jubeir, பணத்தை மாற்றுவதற்கான செயல் முறையை உருவாக்குவதற்கும் ஈரானுக்கு கடன்களை வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்கும் பலன் கிடைக்காது என்று கூறினார்.

இது ஈரானின் மீதான பொருளாதார அழுத்தங்களைக் குறைக்கும், மேலும் அதன் அரசியல் நிலைப்பாட்டை கடினமாக்கும். நிலைப்பாடு ஒன்றுபட்டிருப்பது முக்கியம் என்றும் ஈரானியர்களுக்கு இது தாக்க பாடத்தை புகட்டும் என்று என்றும் நாங்கள் நம்புகிறோம்.

யாரும் போரை விரும்பவில்லை, போர் என்பது கடைசி கட்டமாக இருக்க வேண்டும் என்று al-Jubeir கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்